திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2932 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2932திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) ( எம்பெருமான் ப்ரபஞ்ச சரீரகனாயிருக்கும்படியை முதலிரண்டு பாசுரங்களிற் கூறிய ஆழ்வார், இந்தப் பாசரத்தில் தனக்கு உரிய திருமேனியோடு ஸேவை ஸாதிக்கின்ற அப்பெருமானை அநுபவிக்கிறார். இவ்வாறு அநுபவித்துக் கூறியதற்குக் காரணம் – எம்பெருமான் ஜகத்தை சரீரமாகக்கொண்டு நிற்கும் நிலையும் தனக்கு உரிய திருமேனியைக் கைக்கொண்டு நிற்கும் நிலையும், ஆக இவ் விரண்டும் ஆழ்வார்க்கு ஒத்திருக்கையாலென்க.) 3
பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ! அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ! செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ! சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3
பதவுரை Show / Hide
சாதி மாணிக்கத்தை,Saadhi maanikaththai - நல்ல ஜாதியான (ஆகரத்தில் தோன்றிய) கருமாணிக்கம் போல விளங்குனின்ற திருமேனியையுடைய திருமாலை
பங்கயக் கண்ணன் என்கோ,Pangayak Kannan enko - செந்தாமரைக் கண்ணனென்பேனோ?
பவளச் செவ்வாயன் என் கோ,Pavala sevvayan enko - பவளம்போல சிவந்த வாயை யுடையவன் என்பேனோ?
அம் கதிர் அடியன் என்கோ,Am kathir adiyan enko - அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளை யுடையவனென்பேனோ?
அஞ்சனம் வண்ணன் என்கோ,Anjanam vannan enko - மைபோலுங் கருநிறத்தை யுடையவனெனபோனோ?
செம் கதிர் முடியன் என்கோ,Sem kathir mudiyan enko - சிவந்த ஒளியையுடைய கிரீடத்தையுடையவனென்பேனோ?
திரு மறு மார்வன் என்கோ,Thiru maru maarvan enko - பிராட்டியையும் ஸ்ரீவத்ஸமென்னும் மறுவையுமுடைய திருமார்பையுடைய
வனென்பேனோ?

சங்கு சக்கரத்தன் என்கோ,Sangu sakkarathan enko - சங்குசக்கரங்களை யுடையவனென்பேனோ?