திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2933 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2933திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (*யத் யத் விபூதி மத்..* (உலகத்திலே சிறந்து தோன்றும் பொருள்கள் யாவும் எனது தேஜஸ்ஸின் அம்சத்தினாலுண்டானவை) என்று கீதையில் கண்ணபிரான் பாராட்டிக் கூறியித்தலால் சிறந்த மாணிக்கம் முதலியவைகளில் அவ்வெம்பெருமானது அம்சம் மிக்கிருக்குமென்பது கருதி ஆழ்வார் இந்தப்பாசுரத்தில் எம்பெருமானை மாணிக்கம் முதலிய சிறந்த பொருள்களாகப் பாராட்டி யநுபவிக்கின்றனரென்க. ஆதியஞ்சோதி யென்பது முதல் எம்பெருமானை நேரே சொல்லுகின்றது.) 4
சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ! சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ! ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ! ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4
பதவுரை Show / Hide
ஆதும் இல் காலத்து,Aadhum il kaalaththu - (என்னிடத்து) யாதொரு உபாயமுமில்லாத காலத்திலே
எந்தை,Endhai - என் தந்தையைப்போலப் பாதுகாக்க ஒருப்பட்டவனும்
அச்சுதன்,Achuthan - (பின்பு ஒருகாலும் என்னை அந்த நிலையினின்று) நழுவ விடாதவனும்
அமலனை,Amalanai - (அங்ஙனம் பாதகாத்தலைத்) தன் பேறாகக் கொள்பவனுமான எம்பெருமானை
சாதி மாணிக்கம் என்கோ,Saadhi maanikam enko - மாணிக்கம் – நவமணிகளுள் ஒன்று. (நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.)
சாதி மாணிக்கம் என்றது சிறந்த ஆகரத்திற் பிறந்ததும் குற்றமற்றதும் இயற்கையழகையுடையதும் பெருவிலையதுமான மாணிக்கம் என்றபடி.

சவிகொள் பொன் என்கோ,Savikol pon enko - ஒளியையுடைய பொன் என்பேனோ?
சவிகொள் முத்தம் என்கோ,Savikol muththam enko - நீரோட்டமுள்ள முத்து என்பேனோ?
சாதிநல்வயிரம் என்கோ,Saadhi nal vayiram enko - சாதியில் தோன்றிய சிறந்த வஜ்ரரத்னமென்பேனோ?
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,Thavivu il seer vilakkam enko - அழிதலில்லாத ஒளியையுடைய விளக்கு என்பேனோ?
ஆதி,Aadhi - எல்லாப் பொருள்கட்கும் முந்தியிருப்பதாய்
அம்,Am - அழகியதான
சோதி என்கோ,Sothi enko - தேஜோமயமான திருமேனியையுடையவனென்பேனோ?
ஆதி,Aadhi - தலைவனாகிய
அம்,Am - (ஆனந்தம் முதலிய குணங்களால்) இனியவனான
புருடன் என்கோ,Purudan enko - பரமபுருஷன் என்பேனோ?