திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2934 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2934திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ரஸம் நிறைந்த பண்டங்களாக இருக்குந்தன்மையை ஆழ்வார் இப்பாட்டில் பாராட்டிக் கூறுகின்றார். “ரஸோவை ஸ: ரஸம்ஹ்யேவாயம் லப்த்வாநந்தீபவதி” என்ற உபநிஷத்து இங்கு ஸ்மரிக்கத்தக்கது) 5
அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் என்கோ! நலம்கடல் அமுதம் என்கோ! அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ! நெய்ச்சுவைத் தேறல் என்கோ! கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5
பதவுரை Show / Hide
அச்சுதன்,Achuthan - (எம்பெருமானை) அச்சுதன் என்பேனோ?
அமலன் என்கோ,Amalan enko - அகிலஹேய ப்ரத்யநீகன் என்பேனோ?
அடியவர்,Adiyavar - தன்னடியார்களது
வினை,Vinai - புண்ணியபாபமென்கிற இருவினைகளையும்
கெடுக்கும்,Kedukkum - போக்குவதும்
அ சுவை கட்டி என்கோ,A suvai katti enko - அந்த அமிருதத்தின் உருசியையுடைய கருப்புக் கட்டி யென்போனோ?
அறு சுவை அடிசில் என்கோ,Aru suvai adisil enko - அறுவகைச் சுவையும் நிரம்பிய உணவு என்பேனோ?
நச்சு,Nachchu - (இனிமைபற்றி) விரும்பப்படுவதுமான
மா மருந்தம் என்கோ,Maa marundham enko - சிறந்த ஔஷதமென்பேனோ
நலம் கடல் அமுதம் என்கோ,Nalam kadal amudham enko - நல்ல பாற்கடலில் தோன்றிய அம்ருதமென்பேனோ?
நெய் சுவை தேறல் என்கோ,Nei suvai therhal enko - நெய்போலுஞ் சுவையையுடைய தேன் என்பேனோ?
கனி என்கோ,Kani enko - பழமென்பேனோ?
பால் என்கோனோ,Paal enkonoo - பால் என்பேனோ?