Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2935 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2935திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (வேதம் முதலியனவான இயலும் இசையுமாயுள்ள சப்த ராசிகளை எம்பெருமான் தனக்கு விசேஷணமாகப் பெற்றிருக்கின்றபடியைக் கூறுகின்றாரிப்பாட்டில்) 6
பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6
வானவர் ஆதியை,Vaanavar aadhiyai - தேவாதி தேவனான எம்பெருமானை
பால் என்கோ,Paal enko - பால் என்பேனோ?
பயன் நான்கு வேதம் என்கோ,Payan naangu vedham enko - (பிரமாணங்களுக்குள்) சிறந்ததான நால்வேதங்களென்பேனோ?
சமயம்,Samayam - வைதிக மதத்தைத் தெரிவிக்கின்ற
நீதி,Needhi - முறைமையையுடைய
நூல் என்கோ,Nool enko - (இதிஹாஸ புராணங்களாகிற) சாஸ்திரங்கள் என்பேனோ?
நுடங்கு,Nudangu - (கேட்டவர்களை) ஈடுபடுத்துகின்ற
கேள்வி,Kelvi - (செவியிற்) கேட்டலையுடைய
இசை என்கோ,Isai enko - ஸங்கீதமென்பேனோ?
இவற்றுள்,Ivatrul - கீழ்ச்சொன்ன வேதம் முதலிய எல்லாவற்றினும்
நல்ல,Nalla - சிறந்த
மேல் என்கோ,Mel enko - மேன்மையுடையது என்பேனோ?
வினையின்,Vinaiyin - (செய்கின்ற) முயற்சியைக் காட்டிலும்
மிக்க,Mikka - மிகப்பலமடங்கு மேம்பட்டு விளைகின்ற
பயன் என்கோ,Payan enko - பலன் என்பேனோ?
கண்ணன் என்கோ,Kannan enko - (உனக்கு நான் இருக்கிறேன் நீ அஞ்சவேண்டா என்று சரமச்லோகத்தினால் அபயமளித்த) ஸ்ரீகிருஷ்ணன் என்பேனோ?
மால் என்கோ,Maal enko - அடியவர் திறந்து வியாமோஹமுடையவனென்பேனோ?
மாயன் என்கோ,Maayan enko - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனென்பேனோ?