திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2936 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2936திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ஐச்வரியம் முதலிய புருஷார்த்தங்களை யுடையவனென்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார்) 7
வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ! வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ! ஊனம்இல் செல்வம் என்கோ! ஊனம்இல் சுவர்க்கம் என்கோ! ஊனம்இல் மோக்கம் என்கோ ஒளிமணி வண்ண னையே!–3-4-7
பதவுரை Show / Hide
ஒளி மணி வண்ணனை,Oli mani vannanai - பிரகாசமுள்ள மாணிக்கம் போன்ற வடிவையுடைய பெருமானை
வானவர் ஆதி என்கோ,Vaanavar aadhi enko - நித்யஸூரிகட்குத் தலைவன் என்பேனோ?
வானவர் தெய்வமென்கோ?,Vaanavar Deivam enko - அந்த நித்தியஸூரிகளால் கதியென்று பற்றப்படும் தெய்வமென்பேனோ?
வானவர் போகம் என்கோ,Vaanavar pogam enko - அந்த நித்யஸ்ரிகளால் அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பேனோ?
வானவர்,Vaanavar - அந்த வானவர்கட்கு
முற்றும் என்கோ,Muttrum enko - (இதுவரையிற் கூறப் படாத) எல்லாமும் என்பேனோ?
ஊனம் இல்,Oonam il - என்றும் அழிதல் இல்லாத
செல்வம் என்கோ,Selvam enko - செல்வமென்பேனோ?
ஊனம் இல் ஸ்வர்க்கம் என்கோ?,Oonam il swarggam enko - ஒருநாளும் நசிக்காத ஸுவர்க்க போகமென்போனோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ?,Oonam il mokkam enko - விலஷணமான மோக்ஷம் என்பேனோ?