திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2938 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2938திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமானுடைய விபூதிகளைத் தனித்தனியே சொல்லிமுடித்தல் முடியாத காரியம்; சுருக்கமாகச் சொல்லில், சேதநப் பொருள்களும் அசேதநப் பொருள்களுமாகிய எல்லாமும் அவனுடைய விபூதிகளேயாம்- என்கிறது இப்பாசுரம்.) 9
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல் நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9
பதவுரை Show / Hide
கண்ணனை,Kannanai - (அடியார்க்கு எளியனான) க்ருஷ்ணனாகத் திருவவதரித்தவனும்
மாயன் தன்னை,Maayan thannai - ஆச்சரியமான குணஞ்செயல்களையுடையவனும்
கடல் கடைந்து,Kadal kadainthu - பாற்கலைக் கடைந்து
அமுதம் கொண்ட,Amudham konda - அமிருதத்தையெடுத்து (தேவர்கட்குக்) கொடுத்த
அண்ணலை,Annalai - பெருமையையுடையவனும்
அச்சுதனை,Achuthanai - (தன்னையடைந்தவரை) ஒருபோதும் நழுவவிடாதவனும்
அனந்தனை,Anandhanai - அளவிடமுடியாத ஸ்வரூப ரூபகுண விபூதிகளையுடையவனும்
அனந்தன் தன் மேல்,Anandhan than mel - திருவனந்தாழ்வான் மீது
நண்ணி,Nanni - பொருந்தி
நன்கு உறைகின்றானை,Nangu uraiginraanai - நன்றாகந் வண்வளர்ந்தருள்யவனும்
ஞாலம்,Gnaalam - பிரபஞ்சத்வத
உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) வயிற்றில் வைத்துப் பாதுகாத்து
உமிழ்ந்த,Umizhndha - (அந்தப் பிரளயம் நீங்கியவுடனேயே) வெளிப்படுத்திய
மாலை,Maalai - வாத்ஸ்ல்ய முடையவனுமான திருமாலை
எண்ணும் ஆறு,Ennum aaru - (இத்தன்மைய னென்று) நினைத்துக் கூறும் வகையை
அறியமாட்டேன்,Ariyamaaten - அறிகின்றேனில்லை
யாவையும்,Yaavaiyum - எல்லாவகைப்பட்ட அசேதனப் பொருள்களும்
யவரும்,Yavarum - எல்லாவகைப்பட்ட சேதனப் பொருள்களும்
தானே,Thaane - அந்த எம்பெருமான் தானேயாவன்