| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2943 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இடையர்கள் இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப்பொருள்களையும் அமைப்பதைக்கண்ட கண்ணபிரான் அவற்றை இந்திரனுக்கு இடவொட்டாது தடுத்துக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லி, பிறகு தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றையெல்லாம் தானே யமுது செய்திட, பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்று ஏழுநாள் விடாமழ பெய்வித்தபோது அம்மலையையே பிடுங்கிக் குடையாகத்தூக்கித்தாங்கி, கோகுலத்தைச்சேர்ந்த ஸகலபிராணிகளையும் அதன்கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளின பெருங்கணத்தில் ஈடுபட்டு விக்ருதராகாதவர்கள் நித்திய ஸம்ஸாரிகளா யொழிவர்களென்கிறார்.) 3 | மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும் தலையினொடு ஆதனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார் அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3 | மலையை,Malaiyai - கோவர்த்தன மலையை எடுத்து,Eduthu - குடையாகத் தூக்கி கல் மாரி,Kal maari - கல் மழையை காத்து,Kaathu - தடுத்து பசு நிரை தன்னை,Pasu nirai thannai - பசுக்கூட்டத்தை தொலைவு தவிர்த்த பிரானை,Tholaivu thavirtha piraanai - துன்பந்தவிர்த்த எம்பெருமானை சொல்லி சொல்லி,Solli solli - பலகாலுஞ் சொல்லி எப்போதும்,Eppothum - எப்பொழுதும் நின்று,Nindru - நிலைநின்று ஆதனன்தோடு தலை தட்ட,Aadhananthodu thalai tatta - தரையிலே தலை படும்படியாக தடுகுட்டம் ஆய்,Thadukuttam aai - தலைகீழாக பறவாதார்,Paravaadhaar - ஸம்ப்ரமியாதவர்கள் அலைகொள் நரகத்து,Alaikol naragaththu - துக்கப்படுத்துவதையே இயல்வாகவுடைய நரகத்தில் அழுந்தி கிடந்து,Azhunthi kidandhu - அழுந்தியிருந்து உழைக்கின்ற,Uzhaikkindra - வருந்ததகின்ற வம்பர்,Vambar - வீணராவர். |