Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2944 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2944திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கும்பனென்னும் இடையவர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகையும் கண்ணபிரான் ஏழுதிருவுருககொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன் என்ற இவ்வரலாற்றை அழகாகப் பாடிக்கொண்டு தலைகீழாகக் கூத்தாடி அடைவுகெட ஆராவாரஞ்செய்து திரியாத பாவிகள் ஸாத்விக கோஷ்டிகளின் நடுவே தாங்களும் சிலராய்ப் பிறந்து திரிவது ஏனோ என்று வெறுத்துரைக்கின்றார்.) 4
வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு கட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?–3-5-4
வம்பு அவிழ் கோதை பொருட்டா,Vambu avizh kodhai poruttaa - நறுமணம் மிக்க பூமாலையணிந்துள்ள நப்பின்னைக்காக
மால் விடை ஏழும் அடர்த்த,Maal vidai ezhum adartha - பெரிய ரிஷபங்களேழையும் வலியக்கினவனும்
செம் பவளம் திரள் வாயன்,Sem pavalam thiral vaayan - சிவந்த பவளம் போன்று திரண்ட அதரத்தையுடையவனுமான
சரீதரன்,Sreedharan - திருமாலினது
தொல் புகழ்,Tol pugazh - நிஜமான புகழை
பாடி,Paadi - வாயாரப்பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி,Kumpidu nattam ittu aadi - தலைகீழாகக் கூத்தாடி
கோகு உகட்டுண்டு,Kogu ugattundu - அடிடவுகேடு தலையெடுத்து
உழலாதார்,Uzhalaadhaar - ஸம்ப்ரமியாதவர்கள்
சாது சனங்கள் இடையே,Saadhu sanangal idaiye - ஸாத்விக ஜனங்களின் நடுவிலே
தம் பிறப்பால்,Tham pirappaal - ஜனிப்பதனால்
என் பயன்,En payan - என்ன பயனோ!