| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2947 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியவர்களான பாண்டவர்களின் விரோதிகளைப் போக்கின எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸந்தித்து ஈடுபடமாட்டார்கள் *பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்யவே பிறந்தவர்களென்கிறாரிப்பாட்டில்.) 7 | நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ் சுடரை நினைந்து ஆடி நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே!–3-5-7 | நீர்மை இல்,Neermai il - ஈர நெஞ்சு இல்லாதவர்களான நூற்றுவர்,Nootruvar - துரியோதனன் முதலிய நூறு பேரும் வீய,Vee - மாளும்படியாக, ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்“கு அருள் செய்து நின்று,Arul seithu nindru - கிருபை பண்ணி பார்மல்குசேனை அவிந்த,Paar malgusenai avindha - பூபாரமாயிருந்த சேனைகளைத் தொலைத்தருளின பரம் சுடரை,Param sudarai - பரஞ்சோதியான பெருமானை நினைந்து,Ninaindhu - தியானம் பண்ணி ஆடி,Aadi - கூத்தாடி நீல் மல்கு கண்ணினர் ஆகி,Neel malgu kanninar aagi - ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராகி நெஞ்சம் குழைந்து நையாதே,Nenjam kuzhaindhu naiyaadhe - நெஞ்சுருகி நையாமல் ஊன் மல்கி,Oon malgi - உடல் தடித்த மோடு பருப்பார்,Modu paruppaar - வயிறு பருப்பவர்கள் உத்தமர்கட்கு,Utthamar kadku - பாகவதோத்தமர்களுக்கு என் செய்வார்,En seivaar - யாது செய்வார். |