Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2950 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2950திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (பகவத்குணங்களைக் கேட்டால் விகாரப்படாமலிருக்கு மிருப்பாகிற அவிவேகத்தைத் தவிர்த்து எல்லீரும் அவனது திருக்குணங்களை யநுஸந்தித்துப் பரவசமாய் லஜ்ஜாபிமானங்களைவிட்டு அவனை ஏத்துங்கோ ளென்கிறாரிப்பாட்டில்) 10
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10
கருமமும்,Karumamum - ஸாதந ரூபமான கர்மங்களும்
கரும பலனும்,Karuma palanum - அக்கருமங்களால் ஸாதிக்கப்படும் பலன்களும்
ஆகிய,Aagiya - தானிட்ட வழக்காம்படியுள்ள
காரணன் தன்னை,Kaaranan thannai - ஜகத்காரண பூதனும்
திரு மணிவண்ணனை,Thiru manivanai - அழகிய மணிபோன்ற வடிவையுடையவனும்
செம் கண்,Sem kan - செந்தாமரøக் கண்களையுடையனும்
மாலினை,Maalinai - ஆச்ரித வாத்ஸல்யமே வடிவெடுத்தவனும்
தேவபிரானை,Devapiranai - தேவர்களுக்குப் பிரானுமான எம்பெருமானை
ஒருமை,Orumai - உபாய உபேயங்களில் பேதம் பிறவாதபடி ஒருமைப்பட
மனத்தினுள் வைத்து,Manathinulai vaithu - நெஞ்சிலே வைத்து
உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - மனமுருகி
பெருமையும் நாணும் தவிர்த்து,Perumaiyum naanum thavirthu - அஹங்காரமும் வெட்கமும் இன்றிக்கே
எழுந்து ஆடி,Ezhundhu aadi - கிளம்பிக் கூத்தாடி
பேதைமை தீர்ந்து,Pethaimai theerndhu - அவிவேகமுமொழிந்து
பிதற்றுமின்,Pithattrumin - (அவன் குணங்களை) வாய்வந்தபடி சொல்லுங்கள்.