Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2953 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2953திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் நிரூபித்த பரத்வத்தைக் கேட்டவர்கள் ‘இப்படிப்பட்ட பராத்பரனானவனை நாங்கள் ஆச்ரயிக்க எங்ஙனே கூடும்? என்று சங்கிக்க, அப்படிப் பட்டவன் தானே உங்களோடு ஸஜாதீயனாய் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான் என்ற அவதார வெளிமையை இப்பாட்டில் உணர்த்துகின்றார்.) 2
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவநாசனைப் பங்கயத் தடங்கண்ணனைப் பரவுமினோ.–3-6-2
மூவர் ஆகிய மூர்த்தியை,Moovar aagiya moorthiyai - மூவரும் தானே என்னலாம் படி யுள்ளவனாய்
முதல் மூவர்க்கும்,Mudhal moovarkkum - முதல்வராகச் சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் பிரமனீசன் என்ற மூவர்க்கும்
முதல்வன் தன்னை,Mudhalvan thannai - காரண பூதனாய்
சாவம் உள்ளன நீக்குவாளை,Saavam ullana neekkuvaalai - (அவர்களுக்கு நேரும்) துன்பங்களை யெல்லாம் போக்குபவனாய்
தட கடல்,Thada kadal - விசாலமான திருப்பாற்கடலிலே
கிடந்தான் தன்னை,Kidanthaan thannai - கண்வளர்ந்தருள்பவனாய்
தேவதேவனை,Devadhevanai - தேவாதி தேவனாய்
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்கையில்
எரி எழ,Eri ezha - அக்னி தலையெடுக்கும்படி
செற்ற,Setra - பகைவரை அழித்த
வில்லியை,Villiyai - சார்ங்கத்தை யுடையவனாய்
பாவநாசனை,Paavanasanai - பரம பாவநனாய்
பங்கயம் தட கண்ணனை,Pangayam thada kannanai - தாமரை போன்ற பரந்த திருக்கண்களை யுடையவனான எம்பெருமானை
பரவுமின்,Paravumin - புகழ்ந்து பாடுங்கள்.