திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2954 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2954திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்பாசுரத்தில் ப்ரஸ்தாவித்த இராமபிரானிற்காட்டிலும் எளியனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளின கண்ண பிரானை ஆச்ரயிக்கப் பாருங்களென்கிறார்.) 3
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக் குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை அரவம் ஏறி அலைகடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3
பதவுரை Show / Hide
வானவர்,Vaanavar - தேவர்கள்
பரவி ஏத்த நின்ற,Paravi yetha nindra - வாயாரத் துதிக்கும்படி அமைந்த
பரனை,Paranaai - பராத்பரனாய்
பரம் சோதியை,Param sothiyai - மேலான ஒளியுருவனாய்
குரவை கோத்த,Kuravai kotha - (கோபிமார்களோடு) ராஸக்ரீடை செய்த
குழகனை,Kulzaganai - ரஸிகனாய்
மணிவண்ணனை,Manivannanai - நீலமணிவண்ணனை
குடக்கூத்தனை,Kudakkoothanai - குடக்வத்தாடினவனாய்
அரவம் ஏறி,Aravam aeri - சேஷசயனத்தின் மீதேறி
அலை கடல்,Alai kadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலில்
அமரும் துயில் கொண்ட,Amarum thuyil konda - பொருத்தமான நித்திரையைக் கொண்டவனான
அண்ணலை,Annalai - பெருமானை
நல் இரவும் பகலும்,Nal iravum pagalum - நல்ல இரவும் பகலும்
விடாது,Vidaathu - இடையறாமல்
என்றும் ஏத்துதல்,Endrum yaethudhal - எந்நாறம் தோத்திரம் பண்ணுதலில்
மனம் வைம்மின்,Manam vaimmin - சிந்தை செலுத்துங்கள்.