| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2955 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார்) 4 | வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4 | நும் மனத்து,Num manaththu - உங்கள் நெஞ்சிலே வைம்மின் என்று,Vaimmin endru - வையுங்கள் என்று யான் உரைக்கின்ற,Yaan uraikindra - என்னால் சொல்லப்படுகின்ற மாயவன்,Maayavan - மாயோனுடைய சீர்மையை,Seermaiyai - சீல குணத்தை எம்மனோர்கள்,Emmanorkal - என்னைப் போன்றவர்கள் உரைப்பது என்,Uraippadhu en - சொல்லுவது என்னோ? அது நிற்க,Adhu nirka - அது கிடக்க: வானவர் தம்மை ஆளுமவனும்,Vaanavar thamai aalumavanum - தேவர்களை ஆள்பவனான இந்திரனும் நான்முகனும்,Naanmuganum - பிரமனும் சடை முடி அண்ணலும்,Sadai mudi annalum - ஜடாதரக் கடவுளான சிவனும் செம்மையால்,Semmaiyaal - முறைமை தவறாது பாத பங்கயம்,Padha pankayam - திருவடித் தாமரைகளை நாள்தொறும்,Naaldhorum - எப்போதும் சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து ஏத்தி,Yaethi - துதித்து திரிவர்,Thirivar - இதுவே காரியமாக இருப்பர். |