திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2956 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2956திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய விபூதிவிஸ்தாரங்களை அநுபவித்துப்பேசுகிறார்.) 5
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5
பதவுரை Show / Hide
கரிய மேனி,Kariya meni - சாமளமான வடிவை யுடையனாய்
செய்ய தாமரை கண்ணன்,Seyya thamarai kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையனாய்
விண்ணோர் இறை,Vinnor irai - நித்யஸூரி நாதனாய்
சுரியும் பல் கரு குஞ்சி,Suriyum pal karu kunji - சுருண்டு அலகலகாய்க் கருமையாகிறகுழற் கற்றையையுடையனாய்
சுடர் முடி,Sudar mudi - ஒளி பொருந்திய திருமுடியையுடையனாய்
எங்கள் அண்ணல்,Engal annal - எமக்கு ஸ்வாமியான
கண்ணன் தோற்றம் திரியும் காற்றோடு,Kannan thotram thiriyum kaatrodu - கண்ணபிரானடைய விளக்கமானது, இடையறாது உலாவுகின்ற வாயு வென்ன
அகல்,Agal - விசாலமான
விசும்பு,Visumbu - ஆகாசமென்ன
திணிந்த,Thinindha - கடினமான
மண்,Mann - பூமியென்ன
கிடந்த,Kidantha - கரைகடவாமல் கிடந்த
கடல்,Kadal - ஸமுத்ரமென்ன
எரியும்,Eriyum - ஜ்வலிக்கிற
தீயோடு,Theeyodu - அக்னி யென்ன
இரு சுடர்,Iru sudar - சந்திர ஸூரியர்களென்ன
தெய்வம்,Deivam - மற்றுள்ள தெய்வங்களென்ன
மற்றும்,Matrum - மற்றுள்ள மானிடர்களென்ன
மற்றும்,Matrum - மற்றுள்ள திர்யக் ஸ்தாவரம் முதலியவைகளென்ன (ஆகிய)
முற்றும் ஆய்,Mutrum aai - ஸகலஸ்வரூப மாயிருக்கும்.