திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2957 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2957திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆச்ரித விஷயத்தில் எல்லை கடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார்) 6
தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச் சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால் நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர் ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6
பதவுரை Show / Hide
தோற்றம் கேடு அவை,Thotram kedu avai - ஜனன மரணங்களாகிற அவைகள்
இல்லவன்,Illavan - இல்லாதவனும்
உடையான்,Udaiaan - அவற்றையுடையவனும்
அவன்,Avan - ப்ரமாண ப்ரஸித்தனும்,
ஒரு மூர்த்தி ஆய்,Oru moorthi aai - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன்,Seetrathodu arul petravan - சீறியிருக்கும் நிலைமையிலேயே கருணைக்கு இலக்கான ப்ரஹ்லாதன்
அடி கீழ் புக நின்ற,Adi keezh puga nindra - தன் திருவடிவாரத்தில் கூசாது நிற்கப்பெற்றவனும்,
செம் கண் மால்,Sem kan maal - சிவந்த திருக்கண்களையும் ஆச்ரித பக்ஷபாதத்தையுமுடையவனும்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற,Naatram thotram suvai oli ural aagi nindra - கந்தம் ரூபம் ரஸம் சப்தம் ஸ்பர்சம் என்கிற பஞ்ச விஷயங்களுமாய் நிற்பவனும்
எம் வானவர் ஏற்றையே அன்றி,Em vaanavar yetriyai andri - தேவாதி தேவனுமான எம்பெருமானையே யன்றி
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லாக் காலத்திலும்
மற்று ஒருவரை,Matru oruvarai - வேறொருவரை
யான் இலேன்,Yaan ilein - நான் புகலாகவுடையேனல் லேன்