| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2960 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தி லெழுந்தருளியிருக்குமிருப்பு எங்களுக்கு உபயோகப்படுவதன்று; ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாங்கள் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்; ஆனபின்பு எங்ஙனே அவனைக் கண்டு ஆச்ரயிக்கும்படி?’ என்று ஸம்ஸாரிகள் வினவுவதாகக் கொண்டு, அவர்களுக்கு உத்தரமுரைக்கிறார்; நீங்கள் ஏதேனுமொருபடி உகந்தருளப்பண்ணி ஆச்ரயிப்பது; அத்திருமேனியையே அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தானமாக விரும்பியருளக் குறையில்லை யென்கிறார். இப்பதிகத்திற்கு இப்பாசுரமே உயிராயிருக்கும். இப்பாட்டின் பிரமேயத்திற்கு அவதாரிகை போன்றனவே கீழ்ப்பாசுரங்கள்.) 9 | தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய் எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்; நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9 | உலகத்து உள்ளீர்கள்,Ulagathu ullirgal - உலகத்தவர்களே! தஞ்சம் ஆகிய,Thanjam aagiya - ரக்ஷிக்குந் தன்மை பொருந்திய தந்தையும் தந்தையொடு,Thandaiyodu - தந்தையும் தாய்தானும் ஆய்,Thaithanum aai - தாயுமாய் அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவ்வளவோடும் நில்லாத ஸகலவித பந்துவுமாய் எஞ்சல் இல்,Enjal il - (பகவதநுபவத்தில்) குறைதல் இல்லாத அமரர் குலம்,Amarar kulam - நித்யஸூரிகளின் திரளுக்கு முதல்,Mudhal - தலைவனாய் மூவர் தம் உள்ளும்,Moovar tham ullamum - மும்மூர்த்திகளுக்கும் ஆதியை,Aadhiyai - முதல்வனான எம்பெருமானைக் குறித்து நீர்,Neer - நீங்கள் அஞ்சி,Anji - மேன்மை கண்டு கலங்கி அவன் இவன் என்று,Avan ivan endru - எல்லை கடந்த மஹிமையையுடைய அந்த எம்பெருமான் வேறு, இந்த அர்ச்சாரூபாயான எம்பெருமான் வேறு என்று கொண்டு கூழேல்மின்,Koolzelmin - கலங்கியிருக்க வேண்டா; நெஞ்சினால்,Nenjinal - நெஞ்சாலே நினைப்பான் யவன்,Ninaippan yavan - நினைந்து உகந்தருள்விக்கப்பட்டவன் யாவன் அவன்,Avan - அவனே நீள் கடல் வண்ணன் ஆகும்,Neel kadal vannan aagum - விசாலமான கடல்போன்ற நிறத்தையுடைய ஸர்வேச்வரனாவன் |