| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2962 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார்) 11 | கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப் பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல் பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11 | கண்கள் காண்டற்கு,Kangal kaandarku - கண்களால் பார்ப்பதற்கு அரியன் ஆய்,Ariyan aai - அருமைப்பட்டவனாகி கருத்துக்கு,Karuthukku - தியானத்திற்கு நன்றும் எளியன் ஆய்,Nandrum eliyan aai - மிகவும் சுலபனாய் மண் கொள் ஞாலத்து,Man kol gnaalathu - பூமண்டலத்திலுள்ள உயிர்க்கு எல்லாம்,Uyirkku ellaam - பிராணிகளுக்கெல்லாம் அருள் செய்யும்,Arul seyyum - (அர்ச்சாவதார முகத்தாலே) க்ருபைபண்ணுகிற வானவர் ஈசனை,Vaanavar esanai - தேவாதிதேவனைக் குறித்து, பண் கொள் சோலை,Pan kol solai - (வண்டு முதலியவற்றின்) இசைமிகுந்த சோலைகளையுடைய வழுதி நாடன்,Vazhudi naadan - திருவழுதி நாட்டை யுடையராய் குருகை கோன்,Kurugai kon - திருநகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த பண் கொள் ஆயிரத்து,Pan kol aayirathu - ராகப்ரதாநமான இவ்வாயிரத்தினுள்ளும் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் பத்தார் ஆக கூடும்,Paththaar aaga koodum - பக்தியை யுடையவராகக் கூடும்: பயிலுமின்,Payilumin - (ஆதலால் இப்பதிகத்தை) அப்யஸியுங்கோள். |