திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2963 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்) 1 | பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1 | பதவுரை Show / Hideபயிலும் சுடர் ஒளி மூர்த்தியை,Payilum sudar oli moorthiyai - செறிந்த சுடர்ச் சோதி யுருவனாய் பங்கயம் கண்ணனை,Pangayam kannanai - தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய் பயில இனிய,Payila iniya - பழகப் பழகப் பரம போக்யனாய் நம் பால் கடல் சேர்ந்த பரமனை,Nam paal kadal serndha paramanai - நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருளும் பரம புருஷனான எம்பெருமானை பயிலும் திரு உடையார்,Payilum thiru udaiyaar - நிரந்தராநுபவம் பண்ணுகையாகிற செல்வமுடையவர்கள் யவர் ஏனும்,Yavar enum - எது பிறப்பு ஏதியல்வாக நின்றவரானாலும் அவர்,Avar - அவர்களே பயிலும் பிறப்பிடை தோறும்,Payilum pirappidai thorum - மேன்மேலும் நேர்கின்ற பிறவிகள் தோறும் எம்மை,Emmai - நம்மை ஆளும்,Aalum - அடிமைகொள்ளவில்லை பரமர் கண்டீர்,Paramar kandir - மஹான்களாவர். |