திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2965 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2965திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்.) 3
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3
பதவுரை Show / Hide
நாதனை,Naadhanai - ஸ்வாமியாய்
ஞாலமும் வானமும் ஏத்தும்,Gnaalamum vaanamum yaethum - உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய்
நறுந்துழாய்ப் போதனை,Narunthuzhaip podhanai - பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய்
பொன் நெடு சக்கரத்து,Pon nedu sakkarathu - அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான
எந்தை பிரான் தன்னை,Endhai praan thannai - எம்பெருமானை
பாதம் பணிய வல்லாரை,Paadham paniya vallaaraai - திருவடிகளில் வணங்கவல்லவர்களை
பணியும் அவர்,Paniyum avar - வணங்குமவர்கள்,
ஓதம்,Oadham - பேசப்படுகிற
பிறப்பிடை தோறு,Pirappidai thoru - ஜன்மங்கள்தோறும்
எம்மை,Emmai - எங்களை
ஆள் உடையார்கள் கண்டீர்,Aal udaiyaarkal kandir - அடிமை கொள்பவர்களாவர்.