Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2966 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2966திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (திருவரை பூத்தாற்போலே யிருக்கிற திருப்பீதாம்பரத்தை யணிந்தவனாய், திருக்கழுத்திலே சாத்தும் திவ்யாபரணங்களையுடையனாய், அழகிய அரைநூல் மாலையை யணிந்தவனாய், ஒரு பக்கத்திற்கு வேறொரு ஆபரணம் வேண்டாதபடி தானே போருமாய், காளமேகத்திலே மின்னினாயப்போலே யிருக்கிற யஜ்ஞோப வீதத்தையுடையவனாய், ஆச்ரிதரக்ஷணத்திற்கு முடிகவித்திருப்பவனாய், மற்றம் எண்ணிறந்த திருவாபரணங்களை இயற்கையாகவே அணிந்துள்ளவனான ஸ்ரீமந்நாராயணனுக்கு தாஸாநுதாஸர்களாயிருக்குமவர்கள் பிறவிவேதாறும் எமக்கு அஸாதாரண சேஷிகளாவர்கள் என்றாராயிற்று.) 4
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4
உடை ஆர்ந்த ஆடையன்,Udai aarndha aadaiyan - திருவரைக்குத் தகுதியான திருப்பரிவட்டத்தையுடையவனும்
கண்டிகையன்,Kandikaiyan - கண்ட பூஷணத்தையுடையவனும்
உடை நாணினன்,Udai naaninan - திருப்பரிவட்டத்தின் மேல் சாத்தின திருவரை நாணையுடையவனும்
புடை ஆர்,Pudai aar - ஸந்நிவேசமமைந்த
பொன் நூலினன்,Pon noolinan - பொற்பூணூலை யுடையவனும்
பொன் முடியன்,Pon mudiyaan - அழகிய திருமுடியையுடையவனும்
மற்றும் பல் கலன்,Matrum pal kalan - மற்றும் பலவகைப்பட்ட ஆபரணங்களையும்
நடையா உடை,Nadaiyaa udai - இயற்கையாக உடையவனுமான
திரு நாரணன்,Thiru naaranan - ஸ்ரீமந்நாராயணனுக்கு
தொண்டர்,Thondar - அடியரானார்க்கம் அடியரானவர்
இடை ஆர்,Idai aar - நிரந்தரமான
பிற்ப்பிடை தோறு,Pirappidai thoru - பிறவிதோறும்
எமக்கு,Emakku - எங்களுக்கு
எம் பெரு மக்கள் கண்டீர்,Em peru makkal kandir - எவ்வளவோ சிறந்தவர்களாவர்.