திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2968 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2968திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாமல் அநந்யப்ரயோஜநரா யிருப்பார்க்குத் தன் வடிவழகை அநுபவிக்கும் உஜ்வல ஸ்வபாவனான எம்பெருமானை அநுபவிப்பார் நமக்கு ரக்ஷகரென்கிறார்.) 6
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத் துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6
பதவுரை Show / Hide
அளிக்கும் பரமனை,Alikkum paramanai - உபகரிக்குமிடத்தில் தனக்கு மேலில்லாதபடி உபகரிக்குமவனும்
கண்ணனை,Kannanai - க்ருஷ்ணனாநவந்து அவதரித்தவனும்
ஆழி பிரான் தன்னை,Aazi piraan thannai - திருவாழியைக் கையிலேந்தி மஹோபகாரங்கள் செய்யவனும்.
துளிக்கும் நறுகண்ணி,Thulikkum narukanni - தேன் வெள்ளமிடா நின்று நறுமணம் மிக்க மாலையையணிந்துள்ளவனும்
தூமணி வண்ணன்,Thoomani vannan - அழுக்கற்ற மாணிக்கம் போன்ற வடிவையுடையவனும்
ஒளி கொண்ட சோதியை,Oli konda sothiyai - அளவற்ற தேஜோ ரூபமான விகரஹத்தை யுடையவனுமான
எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை
உள்ளத்து கொள்ளுமவர்,Ullathu kollumavar - நெஞ்சிலே தாங்குமவர்கள்
எம்மை,Emmai - எம்மை
சலிப்பு இன்றி ஆண்டு,Salippu indri aandu - ஒருகாலும் கைவிடாமே அடிமைகொண்டு
சன்மம் சன்மாந்தரம் காப்பர் கண்டீர்,Sanmam sanmaantharam kaappar kandir - எத்தனை ஜன்மமானாலும் ரக்ஷிக்குமவர்களாவர்.