| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2971 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (கையுந்திருவாழியுமான அழகைக்கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்..) 9 | குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9 | குலம் தாங்கு,Kulam thaangu - ஸகல குலங்களுக்கும் ஆதாரமான சாதிகள் நாலிலும்,Saadhigal naalilum - பிராம்மணாதி ஜாதிகள் நான்கிலும் கீழ் இழிந்து,Keezh izhindhu - கீழே போந்து எத்தனை நலம் தான் இலாத,Eththanai nalam thaan ilaadha - மிகவும் தாழ்வின் எல்லையிலே நின்ற சண்டாளர் சண்டாளர்கள் ஆயினும்,Sandalar sandalargal aayinum - சண்டாளரினும் கடை கெட்ட சண்டாளர்களேயானாலும், வலம் தாங்கு சக்கரத்து,Valam thaangu sakkarathu - வலத்திருக்கையில் ஏந்தப்பட்ட திருவாழியையுடைய அண்ணல்,Annal - ஸ்வாமியால் மணிவண்ணற்கு,Manivannarku - நீலமணி நிறத்தனான எம்பெருமானுக்கு ஆள் என்று,Aal endru - சேஷப்பட்டிருக்கின்றோமென்று உள் கலந்தார்,Ul kalanthaaar - உண்மையான ஸ்வரூபஜ் ஞான முடையவர்களுக்கு அடியார் தம்,Adiyaar tham - அடிமைப்பட்டவர்களுக்கு அடியார்,Adiyaar - அடிமைப்பட்டவர்கள் எம் அடிகள்,Em adigal - நமக்குத் தலைவராவார். |