| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2972 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இவ்வுலகத்தை ஒருகால் அளந்தருளி ஒருகால் உண்டருளி ஆலிலையில் கண்வளர்ந்தருளின பெருமானுடைய திருக்குணங்களுக்குத் தோற்று அடிமையாயிருப்பாருடைய தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்கிறார்.) 10 | அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும் படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10 | அடி ஆர்ந்த வையம்,Adi aarndha vaiyam - (த்ரிவிக்ரமாவதார காலத்தில்) தன் திருவடியோடு ஸம்பந்தம் பெற்றதான வுலகை உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிரில் அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - திருக்கண் வளர்ந்தருள்கின்ற படி ஆதும்இல்,Padi aadhum il - சிறிதும் உபமானமில்லாத குழவிப் படி,Kuzhavip padi - சிறு குழந்தைப் பருவமுடைய எந்தை பிரான் தனக்கு,Endhai praan thanakku - எம்பெருமானுக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள்,Adiyaar adiyaar tham adiyaar adiyaar thamakku adiyaar adiyaar tham adiyaar adiyongal - ஏழு தலைமுறையளவான அடிமையின் எல்லையிலே நிற்வர்களுக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள். |