திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2973 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2973திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் இனி ஒருநாளும் பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல் முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11
பதவுரை Show / Hide
அடி ஓங்கு,Adi oongu - தங்களுடைய ராஜ்ய ப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான
நூற்றுவர்,Nootruvar - (துரியோதனன் முதலானோர்) நூறுபேர்களும்
வீய,Veeya - முடியும்படி
அன்று,Andru - முன்பொருகால்
ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்கு
அருள்செய்த,Arulseydha - க்ருபை பண்ணின
நெடியோனை,Nediyonai - திருமாலை நோக்கி
தென்குருகூர் சடகோபன் குற்றேவல்கள்,Thenkurugoor Sadagopan kutraevalgal - அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய கைங்கரிய ரூபமாய்
அடி ஆர்ந்த,Adi aarndha - ஸகலலக்ஷண ஸம்பன்னமான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளும்
அவன் தொண்டர் மேல் முடிவு,Avan thondar mel mudivu - பாகவத விஷயத்தில் முடிவான
இவை பத்து,Ivai paththu - இப்பதிகத்தை
ஆர,Aara - நெஞ்சிலே பொருந்த
கற்கிற்கில்,Karkirkil - கற்கவல்லாராகில்
சன்மம்,Sanmam - பிறப்பு
செய்யாமை,Seyyaamai - மறுபடியும் உண்டாகாதபடி
முடியும்,Mudiyum - முடிந்துபோம்