Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2981 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2981திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச் செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார்.) 8
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!
நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே!
உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8
கோலமே,Kolamey - அழகு தானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே!
தாமரைக் கண்ணது,Thaamaraik kannathu - தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய
ஓர் அஞ்சனம் நீலமே,Or anjanam neelamae - ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே!
நின்று,Nindru - நிலை நின்று
எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை
ஈர்கின்ற,Eerkinra - ஈடுபடுத்துகின்ற
சீலமே,Seelamae - சீலகுணமே வடிவெடுத்திருப்பவனே!
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே,Senru sellaadhana mun nilaam kaalamae - இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் முக்காலங்களுக்கும் நியாமகனே!
உன்னை,Unnai - உன்னை
எந்நாள்,Ennaal - என்றைக்கு
கண்டு கொள்வன்,Kandu kolvan - கண்டு அநுபவிப்பேன்.