திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2982 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார்.) 9 | கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே!
கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர,
ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்!
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9 | பதவுரை Show / Hideமாவலி,Maavali - ‘மஹாபலியே! நான்,Naan - நான் மூ அடி,Moo adi - மூன்றடி நிலத்தை கொள்வன்,Kolvan - ஏற்றுக் கொள்வேன், தா,Thaa - கொடுப்பாயாக’ என்ற,Endra - என்ற சொன்ன கள்வனே,Kalvane - வஞ்சகனே! கஞ்சனை,Kanjanai - கம்ஸனை வஞ்சித்து,Vanjiththu - தொலைத்து வாணனை,Vaananai - பாணாசுரனை உள் வன்மைதீர,Ul vanmaitheera - மன உறுதியானது அழியும்படி ஓர் ஆயிரம் தோள் துணித்த,Or aayiram thol thuniththa - ஆயிரம் புயங்களையும் அறுத்த புள் வல்லாய்,Pul vallaai - கருடவாஹனனே! உன்னை,Unnai - உன்னை எஞ்ஞான்று,Ennyaanru - எக்காலம் பொருந்துவன்,Porundhuvan - அடையப்பெறுவேன்? |