| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2985 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (வேறு சிலரைக் கவி பாடுகின்றவர்களுக்கு ஹிதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்.) 1 | சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ! என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1 | இது,Idhu - இப்போது நான் சொல்லும் ஹிதவார்த்தையானது சொன்னால்,Sonnal - சொல்லப்படுமாகில் விரோதம்,Virodham - உங்களுக்கு அநிஷ்டமாக இருக்கும் ஆகிலும்,Aagilum - ஆனாலும் சொல்லுவன்,Solluvan - உங்கள் அநர்த்தத்தைப் பொறுத்திருக்கமாட்டாமையினால் சொல்லியே தீர்வேன் கேண்மின்,Kenmin - காது கொடுத்துக்கேளுங்கள் வண்டு,Vandu - வண்டுகளானவை தென்னா தெனா என்று,Thennaa thenaa endru - தென்னா தென்னாவென்று ரீங்காரஞ் செய்யப்பெற்ற திருவேங்கடத்து,Thiruvengadathu - திருமலையிலே என் ஆனை,En aanai - என்னுடைய யானை போன்றவனும் என் அப்பன்,En appan - எனக்கு மஹோபகாரகனுமான எம்பெருமான்,Emperumaan - ஸ்வாமி உளன் ஆக,Ulan aaga - என் கவிக்கு இலக்காயிருக்கும்போது என் நாவில் இன் கவி,En naavil in kavi - எனது நாவினின்று உண்டான மதுரமான கவிகளை யான்,Yaan - நான் ஒருவர்க்கும்,Oruvarkkum - வேறொருவர்க்கும் கொடுக்கிலேன்,Kodukkilaen - கொடுக்கமாட்டேன் |