| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2986 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத் கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார்.) 2 | உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என் குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2 | குளன் ஆர்,Kulan aar - குளங்கள் நிறைந்த கழனி சூழ்,Kazhani soozh - கழனிகளால் சூடுப்பட்ட கண்,Kann - இடமகன்ற நன்,Nan - விலக்ஷணமான குறுங்குடி,Kurungudi - திருக்குறுங்குடியிலே மெய்ம்மை,Meimmai - ஸௌலப்யம் முதலிய குணங்களோடு கூடி உண்மையாக உளன் ஆய,Ulan aay - உறைபவனான எந்தையை எந்தை பெம்மானை ஒழிய,Endhaiyai endhai pemmaanai ozhiyya - என் குலநாதனைத் தவிர தன்னை,Thannai - அஸத்கல்பனான தன்னை உளன் ஆகவே,Ulan aagavae - ஸத்தானவனாகவே கொண்டு ஒன்று ஆக எண்ணி,Ondru aaga enni - ஒரு பொருளாக நினைத்து நன் செல்வத்தை,Nan selvaththai - தன்னதாக அபிமானித்த அற்ப செல்வத்தை வள் ஆ,Val aa - மிகவும் மேம்பாடாக மதிக்கும்,Mathikkum - எண்ணியிருக்கிற இம் மானிடத்தை,Im maanidaththai - இந்த அற்ப மனிதர்களை கவி போடி என்,Kavi podi en - கவி பாடுவதனால் என்ன பலன்? |