| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2988 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியான அஸ்திரங்களைக் கவிபாடுவதில் என்ன பயனுண்டென்கிறார்.) 4 | என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்! மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால், தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4 | புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே! மன்னா,Manna - அல்பாயுஸ்ஸுக்களான மனிசரை,Manisarai - மனிதர்களை பாடி,Paadi - கவிபாடி படைக்கும்,Padaikkum - (அதனால்) நீங்களடைகின்ற பெரும்பொருள்,Perumporul - பெருஞ்செல்வம் என் ஆவது,En aavadhu - யாதாவது? எத்தனை நாளைக்கு போதும்,Eththanai naalaikku poadhum - (அது) எத்தனை நாளைக்குப் பற்றும்? வின் ஆர்,Vin aar - ஒளிநிறைந்த மணி முடி,Mani mudi - மணிமகுடத்தை யுடையவனான விண்ணவர்தாதையை,Vinnavarthaathaiyai - தேவாதி தேவனை பாடினால்,Paadinaal - கவிபாடினால் (அப்பெருமான் உங்களை) தன் ஆகவே கொண்டு,Than aagavae kondu - தனக்கு அடிமையாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளும்,Sanmam seiyyaamaiyum kollum - இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன். |