| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2989 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துற முன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக) 5 | கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்! கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5 | கொள்ளும் பயன் இல்லை,Kollum payan illai - நீங்கள் பெறும் பலன் சிறிது மில்லையாம்படி குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,Kuppai kilarththanna selvaththai - குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து வள்ளல் புகழ்ந்து,Vallal pugazhndhu - உதாரனே! என்று கொண்டாடி நும் வாய்மை இழக்கும்,Num vaaimai izhakkum - உங்களுடைய ஸத்யத்தையிழந்தொழிகிற புலவீர்காள்,Pulaveerkaal - புலவர்களே! கொள்ள,Kolla - நீங்கள் பாடுகிற துதி மொழிகளைப் பொருத்தமாகக் கொள்ளவல்ல பூர்த்திரயையுடையவனும் வேண்டிற்று எல்லாம் தரும்,Vendrittu ellaam tharum - வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும் கோது இல்,Kodhu il - குற்ற மற்றவனும் என் வள்ளல்,En vallal - என் விஷயத்தில் மஹோபகாரங்கள் செய்தவனும் மணிவண்ணன் தன்னை,Manivannan thannai - நீலமணி வண்ணனுமான பெருமானை கவி சொல்ல,Kavi solla - கவி பாட வம்மின்,Vammin - வாருங்கள். |