| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2990 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார்.) 6 | வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ! இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்; நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6 | புலவீர்,Pulaveer - புலவர்களே! வம்மின்,Vammin - (நரஸ்துதியை விட்டு) வாருங்கள்; நும் மெய்,Num mei - உங்களது உடலை வருத்தி,Varuththi - சிரமப்படுத்தி கை செய்து,Kai seithu - தொழில் செய்து உய்ம்மின்,Uymmmin - ஜீவியுங்கோள்: மன்,Man - (ப்ரவாஹரூபேண) நித்யமாயிருக்கின்ற இ உலகினில்,I ulagil - இந்த லோகத்தில் செவ்வர்,Sevvar - (உங்களுக்குப் போதுமானவை கொடுக்கவல்ல) ஸ்ரீமான்கள் கிடையார்; இப்போது நோக்கினோம்,Ippoathu nokkinom - (இதனை) இப்போது ஆராய்ந்து அறிந்தோம்; நும்,Num - உங்களுடைய இன் கவி கொண்டு,In kavi kondu - மதுரமான கவிகளைக் கொண்டு நும் நும்,Num num - உங்களுங்களுடைய இட்டா தெய்வம்,Ittaa deivam - இஷ்ட தெய்வத்தை ஏத்தினால்,Yaeththinaal - துதி செய்தால் (அந்தத் துதிமொழிகளிற் கூறும் குணங்கள் அவர்களிடத்து இல்லாமையாலே அவை) செம் மின் சுடர் முடி,Sem min sudar mudi - செவ்வனே மின்னுகின்ற வொளி பொருந்திய திருமுடியை யுடைய என் திருமாலுக்கு,En thirumaalukku - எனக்கு ஸ்வாமியான லக்ஷ்மீநாதனுக்கு சேரும்,Serum - அந்வயிக்கும். |