| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2991 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கீழ் ஆறு பாசுரங்களினால் பரோபதேசம் செய்தருளின ஆழ்வார், தம் உபதேசம் கேட்டு ஒருவரும் திருந்தக காணாமையாலே வெறுத்து அவர்களைவிட்டு, எம்பெருமானை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகையாகிற பாவம் எனக்கு இல்லையாகப் பெற்றதே! என்று தம்மளவிலே தாம் உகந்து பேசுகிறார். “வழிபறிக்கும் நிலத்தில் தன்கைப் பொருள்கொண்டு தப்பினவன் உகக்குமாபோலே, இவர்களைப் போலன்றியே பகவத் விஷயத்தை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே யொழியப்பெற்றேனென்று ப்ரீதராகிறார்” என்பது நம்பிள்ளை ஈடு.) 7 | சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்; மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று, பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7 | சேரும்,Serum - தனக்குத் தகுதியான கொடை புகழ்,Kodai pugazh - ஔதார்யத்தினாலாகிய புகழுக்கு எல்லை இலானை,Yellai ilaanai - எல்லையில்லாதிருப்பவனும் ஓர் ஆயிரம் பேரும் உடைய,OrAayiram perum udaiya - ஆயிரந் திருநாமங்களையுடைய உபகாரநனுமான பிரானை அல்லால்,Piraanai allaal - எம்பெருமானை யன்றி பாரில்,Paril - பூமியில் மற்று ஓர் பற்றையை,Matru OrPatraiyai - வேறொரு அஸார பதார்த்தத்தைக் குறித்து கை மாரி அனைய என்று,Kai maari anaiya endru - ‘கைகள் மேகம்போல் உதாரங்கள்’ என்றும் திண் தோள்,Thin thol - உறுதியான புயங்கள் மால் வரை ஒக்கும் என்று,Maal varai okkum endru - பெரிய மலைபோல்வன என்றும் பச்சை பசும்பொய்கள் பேச யான் கில்லேன்,Pachchai pasumpoygal pesa yaan killeen - மெய் கலவாத புதுப் பொய்களைப் பேசுவதற்கு நான் சந்தனல்லேன். |