| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2992 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (நப்பின்னைப் பிராட்டியின் ஸம்ச்லேஷ விரோதிகளைத் தொலைத்து அவளை அடிமை கொண்டது போல என் விரோதிகளையும் தொலைத்து என்னை அடிமை கொள்பவனாக எம்பெருமானையொழிய வேறு சில நீசரைக் கவிபாட நான் நினைத்தாலும் என்வாய் அதுக்குப் பாங்காகாது என்கிறார்.) 8 | வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க் காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன், மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8 | வேயின் மலிபுரை தோளி,Veyin malipurai tholi - மூங்கிலைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்ற தோள்கையுடையவளான பிள்ளைக்கு,Pillaiyukku - நப்பின்னைப் பிராட்டிக்கு மணாளனை,Manaalanai - மணவாளனான கண்ணபிரானைக் குறித்து எல்லை இலாதன,Yellai ilaadhana - நிரவதிகமாயும் ஆய,Aaya - ஆராய்வதற்கு உரியனவுமான பெரும்புகழ்,Perumpugazh - பெரிய கீர்த்திகளை பாடி,Paadi - கவிபாடி போய்,Poi - நெடுஞ்காலம் நடந்து காயம் கழித்து,Kaayam kazhiththu - இவ்வுடலை யொழித்து அவன் தான் இணை கீழ்,Avan than inai keezh - அவ்வெம்பெருமானது திருவடியிணையில் புகும் காதலன்,Pugum kadhalan - அந்வயிக்க வேணுமென்கிற ஆசையையுடைய நான் மாயம் மனிசரை,Maayam manisarai - பிராகிருதர்களான மனிசர்களை என் வாய் கொண்டு,En vaai kondu - (எம்பெருமானையே துதிக்கக் கண்ட) எனது வாக்கைக் கொண்டு என் சொல்ல வல்லேன்,En solla vallen - என்ன கவி பாடுவேன்? (யாதொன்றும் பாடமாட்டேன்.) |