| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2993 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப் பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார்.) 9 | வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்; ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்; சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9 | வாய்கொண்டு,Vaikonddu - (அருமையான) வாக்கைக் கொண்டு மானிடம்,Maanidam - அற்பமனிதர்களை பாட வந்த,Paada vandha - பாடப்பிறந்த கவியேன் அல்லேன்,Kaviyen allen - கவி நானல்லேன் ஆய்,Aay - (வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட சீர் கொண்ட,Seer kondda - திருக்குணங்களையுடைய வள்ளல்,Vallal - உதாரனாகிய ஆழி பிரான்,Aazhi praan - சக்கரக்கையனான பெருமான் எனக்கே உளன்,Enakke ulan - என் வாக்குக்கே இலக்காகவுள்ளான். (அப்பெருமான்) சாய் கொண்ட,Saai konda - அழகிய இம்மையும்,Immaiyum - இஹலோகத்து அர்ச்சாவதார அநுபவத்தையும் சாதித்து,Saadiththu - உண்டாக்கித்தந்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று,Vaanavar naattaiyum nee kanddukol endru - பரமபதாநுபவத்தையும் நீ பெறுவாயாக என்று சொல்லி வீடும்,Veedum - மோக்ஷ சுகத்தையும் நின்று நின்று,Nindru nindru - அடைவு பட தரும்,Tharum - கொடுத்தருள்வன். |