| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2994 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார்.) 10 | நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10 | பல நாள்,Palanaal - அநேக காலம் நின்று நின்று,Nindru nindru - இருந்து உய்க்கும்,Uykkum - சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற இ உடல்,eUdal - இந்த சரீரத்தை நீங்கி போய்,Neengi poi - விட்டொழிந்து போய் சென்று சென்று ஆகிலும்,Sendru sendru aagilum - இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்) கண்டு,Kandu - தன்னைக் கண்டு சன்மம்,Sanmam - பிறவியை கழிப்பான்,Kazhipaan - கழிக்கக்கூடுமென்று எண்ணி,Enni - திருவுள்ளம் பற்றி ஒன்றி ஒன்றி,Ondri ondri - (ஒருகாலும் சோம்பிக் கைவிடாமல்) மேன்மேலும் ஊக்கங்கொண்டு உலகம் படைத்தான்,Ulagam padaithaan - உலகங்களைப் படைத்து வருகின்ற எம்பெருமானுடைய கவி ஆயினேற்கு,Kavi aayineerku - கவியாக அமைந்த எனக்கு இனி என்றும் என்றும்,eni endrum endrum - இனி எந்நாளும் மற்று ஒருவர் கவி,Matru oruvar kavi - வேறொருவரைக் கவிபாடுதல் ஏற்குமே,Earkume - தகுமோ? (தகாது) |