| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2995 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11 | ஏற்கும் பெரும் புகழ்,Erkum perum pugazh - தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய் வானவர் ஈசன் வண் குருகூர்ச் சடகோபன்,Vaanavar eesan van kurugoor Sadagopan - நித்யஸூரி நாதனான எம்பெருமான் ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன் சொல்,Sol - அருளிச்செய்த ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - ஏற்ற பெரும்புகழையுடைய ஆயிரத்துள்,Aayiraththul - இவ்வாயிரத்தினுள் கண்ணன் தனக்கு,Kannnan thanakku - கண்ணபிரான் விஷயமாக ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - தகுதியான சிறந்த புகழையுடைத்தான இவை ஓர் பத்தும்,Evai OrPaththum - இந்தத் திருவாய்மொழியை சொல்ல வல்லார்க்கு,Solla vallaarkku - ஓதவல்லவர்க்கு சன்மம் இல்லை,Sanmam ellai - மறுபிறப்பு இல்லை |