| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2998 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (எம்பெருமானுடைய போக்யதையை அநுஸந்தித்து அவனுக்கு அடிமை செய்வதிலேயே ஊன்றியிருக்குமெனக்கு ஒரு அச்சமுமில்லையென்கிறார்.) 3 | முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப் பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3 | முட்டு இல்,Muttu il - இடையூறொன்றுமில்லாத பல் போகத்து,Pal pogaththu - பலவகையான போகங்களையுடையவனும் ஒரு தனி நாயகன்,Oru thani nayakan - ஒப்பற்ற தலைவனும் மூ உலகுக்கு உரிய,Moo ulakukku uriya - மூவுலகத்தவர்கட்கும் பொதுவிலே போக்யமான கட்டியை,Kattiyai - கருப்பங்கட்டி போன்றவனும் தேனை,Thenai - தேன் போன்றவனும் அமுதை,Amuthai - அமிருதம் போன்றவனும் நல் பாலை,Nal paalai - நல்ல பால்போன்றவனும் கனியை,Kaniyai - கனி போன்றவனும் கரும்பு தன்னை,Karumbu thannai - கரும்பு போன்றவனுமாய் மட்டு அவிழ்,Mattu avizh - மது பெருகப்பெற்ற தண் அம் துழாய் முடியானை,Than am thulazhai mudiyaanai - குளிந்தழகிய திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்த வனுமான எம்பெருமானை வணங்கி,Vanangi - நமஸ்கரித்து அவன் திறத்து,Avan thirathu - அவன் விஷயத்திலே பட்ட பின்னை,Patta pinnai - ஆட்பட்டோனாதாலால் யான்,Yaan - இப்படிப்பட்ட அடியேன் இறை ஆகிலும்,Irai akilum - சிறிதளவும் என் மனத்து,En manathu - என் மனத்தில் பரிவு இலன்,Parivu ilan - பீடையையுடையே னல்லேன். |