| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3 | திருப்பல்லாண்டு || 3 | வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | வாழ் ஆள் - Vaazh Aal - கைங்கர்யமாகிற போகத்துக்கு பட்டு - Pattu - பொருந்தி நின்றீர் - Nindreer - நிலைநின்றவர்களாய் உள்ளீரேல் - Ulleerel - இருப்பீர்க ளானால் வந்து - Vandhu - (விரைவாக) மண்ணும் - Mannum - (திருமுளைத் திருநாளைக்குப்) புழுதிமண் சுமக்கையையும் மணமும் - Manamum - (அந்தக்கலியாணத்திற்கு) அபிமானிகளாய் இருக்கையையும் கொண்மின் - Konmin - ஸ்வீகரியுங்கள் கூழ் - Koozh - சோற்றுக்காக ஆள் பட்டு - Aal Pattu - (பிறர்க்கு) அடிமைப்பட்டு நின்றீர்களை - Nindreergalai - (எங்கும் பரந்து) நிற்கும் உங்களை எங்கள் - Engal - (அநந்யப்ரயோஜனரான) எங்களுடைய குழுவினில் - Kuzhuvinil - கூட்டத்திலே புகுதல் ஒட்டோம் - Puguthal Ottom - சேரவிடமாட்டோம் நாங்கள், Naangal - நாங்களோவெனில் ஏழ் ஆள் காலும், Ezh Aal Kaalum - முன்னேழ் பின்னேழ் நடுவேழாகிய இருபத்தொரு தலைமுறைகளிலும் பழிப்பு இலோம், Pazhippu Ilom - (ஒருவித மான) குற்றமும் இல்லாதவர்கள் இராக்கதர், Iraakkathar - (ராவணன் முதலிய) ராக்ஷஸர்கள் வாழ், Vaazh - வாழ்ந்துவந்த இலங்கை, Ilankai - லங்கையானது பாழ் ஆள் ஆக, Paazh Aal Aaga - பாழடைந்த ஆளை உடையதாம்படி படை, Padai - யுத்தத்திலே பொருதானுக்கு, Poruthaanukku - (அன்று) சண்டை செய்தருளிய எம்பிரானுக்கு பல்லாண்டு கூறுதும், Pallaandu Koordhum - (இன்றிருந்து) திருப்பல்லாண்டு பாடுமவர்களாயிருக்கிறோம். |