| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3000 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (வைதிகன் பிள்ளைகளைக் கொணர்ந்து கொடுத்த அதிமாநுஷ சேஷ்டிதத்தை அநுஸந்தித்து, இங்ஙனே அரியன செய்தும் அடியார்களைக் காத்தருளவல்ல பெருமானைப் பற்றின வெனக்கு யாதொரு துயருமில்லையென்கிறார்.) 5 | இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப் படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச் சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5 | ஒருநாள்,Orunaal - ஒரு நாளிலே ஒரு போழ்தில்,Oru pozhdhil - ஒரு அவஸரத்திலே எல்லா உலகும் கழிய,Ellaa ulagam kazhiya - எல்லா வுலகங்களுக்கும் அப்பால்போம்படியாக, படர் புகழ் பார்த்தனும்,Padar pugazh paarthanum - பரம்பின புகழை யுடையனான அர்ஜுநனும் வைதிகனும்,Vaidhikanum - வைதிகப்பிராமணனும் உடன் ஏற,Udan era - கூடவே ஏறி வரும்படி இடர் இன்றியே,Idar indriye - இடைஞ்சல் ஒன்றுமின்றி திண் தேர் கடவி,Thin ther kadavi - திடமான திருத்தேரைச் செலுத்தி சுடர் ஒளி ஆய்கின்ற,Sudar oli aayginra - மிகவும் சிறந்த தேஜோ மயமாயிராநின்ற தன்னுடை சோதியில்,Thannudai sothiyil - தன்னுடையதாய் பரஞ்சோதியெனப்படுமதான திருநாட்டிலே வைதிகன் பிள்ளகைளை,Vaidhikan pillakalai - அந்த வைதிகனுடைய பிள்ளைகள் நால்வரையும் உடலொடும்,Udalodum - அவ்வுடம்போதே கொண்டு கொடுத்தவனை,Kondu koduththavanai - மீட்டுக்கொணர்ந்து கொடுத்தருளின பெருமானை பற்றி,Patri - அடைந்து (அதனால்) ஒன்றும் துயர் இலன்,Ondrum thuyar ilan - சிறிதும் துயமுடையே னல்லேன் |