| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3004 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (சிவன் பிரமன் முதலாய எல்லாரையும் மற்று மெல்லாப் பொருள்களையும் பிரளயங் கொள்ளாமே திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமானை நான் அடையப் பெற்றதனால் ஒரு தளர்வுமுடையே னல்லேன் என்றாராயிற்று.) 9 | துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9 | துக்கம் இல் ஞானம்,Thukkam il gnanam - அஜ்ஞானம் கலசாத ஞானத்தை யுடையனாய் சுடர் ஒளி மூர்த்தி,Sudar oli moorthi - மிகுந்த தேஜோரூபமான விக்ரஹத்தையுடையனாய் துழாய் அலங்கல் பெருமான்,Thulasi alangal perumaan - திருத்துழாய் மாலையையணிந்த பெருமானாய், மிக்க பல்மாயங்களால்,Mikka palmaayangalal - மிகப் பலவகைப்பட்ட ஆச்சரிய சக்திகளாலே வேண்டும் உருவு கொண்டு,Vendum uruvu kondu - இஷ்டமான உருவங்களைப் பரிக்ரஹித்து விகிருதம் செய்து,Vikrutham seithu - விலக்ஷணசேஷ்டிதங்களைச் செய்யுமவனாய், நக்கபிரானோடு,Nakkabiraanodu - திகம்பரச் சாமியான சிவபெருமானும் அயன்,Ayan - பிரமனும் முதல் ஆக,Mudhal aaga - முதலாக எல்லாரும்,Ellarum - சேதநர்களெல்லாரையும் எவையும்,Evaiyum - அசேதனங்களெல்லாவற்றையும் ஒக்க,Okka - ஒரு சேர தன்னுள் ஒடுங்க,Thannul odunga - தனக்குள்ளடங்குமாறு விழுங்க வல்லானை பெற்று,Vizhunga vallaanaipetru - (பிரளகாலத்தில்) விழுங்கி ரக்ஷிக்கவல்லவனான எம்பெருமானை யடைந்ததனால் ஒன்றும் தளர்வு இலன்,Ondrum thalarvu ilan - சிறிதும் தளர்ச்சியுடையே னல்லேன் |