| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3005 | திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (அனைவர்க்கும் அந்தராத்ம பூதனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுமுடையேனல்லேனென்கிறார்.) 10 | தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக் கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10 | என்றும்,Endrum - எக்காலத்திலும் எங்கும்,Engum - எவ்விடத்திலும் தளர்வு இன்றியே,Thalarvu indriye - ஆயாஸமில்லாமல் பரந்த,Parandha - வியாபித்திருக்குமவனாய், தனி முதல் ஞானம்,Thani mudhal gnanam - அத்விதீயமாய் ஸமஸ்த காரணமான ஞானமே வடிவெடுத்தவனாய் அளவு உடை,Alavu udai - அளவுபட்ட ஐம் புலன்கள்,Aimbulangal - இந்திரியங்கள் ஐந்தினாலும் அறியாவகையால்,Ariyaavagaiyaal - அறியக்கூடாதபடி அரு ஆகி நிற்கும்,Aru aagi nirkum - நிரவயவஸ்ரூபனாயிருக்குமவனாய், வளர் ஒளி ஈசனை,Valar oli eesanai - வளர்கின்ற வொளியையுடைய ஸ்வாமியாய் மூர்த்தியை,Moorthiyai - விலக்ஷண விக்ரஹயுக்தனாய் பூதங்கள் ஐந்தை,Boothangal aindhai - பஞ்சபூத நிர்வாஹகனாய் கிளர் ஒளி மாயனை,Kilar oli maayanai - ஒளி பொருந்தி மேன்மேலுங் கிளர்கின்ற ஆச்சர்ய சேஷ்டைகளை யுடையனான கண்ணனை,Kannanai - கண்ணபிரானை தாள் பற்றி,Thaal patri - திருவடிதொழப்பெற்றதனால் யான் என்றும் கேடு இலன்,Yaan endrum kedu ilan - யான் ஒருநாளும் கேடு உடையேனல்லேன். |