| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3007 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கட்கூடாகக் காணப்பெறலாயிருக்குமாகையாலே நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார்.) 1 | ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1 | ஒரு நாயகம் ஆய்,Oru nayagam aayi - பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய் ஓட,Oda - வெகுகாலமளவும் உலகுஉடன்,Ulaguudan - உலகங்களை யெல்லாம் ஆண்டவர்,Aandavar - அரசாட்சி புரிந்தவர்கள் கரு நாய் கவர்ந்த காலர்,Karu naai kavarntha kaalar - (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும் சிதைகிய பானையர்,Sithaigiya paanaiyar - உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி பெரு நாடு காண,Peru naadu kaana - உலகமெல்லாம் திரண்டுவந்து (பலிபவத்தை) காணும்படியாக இம்மையிலே,Immaiyile - இப்பிறவியிலேயே தாம்,Thaam - தாங்களே பிச்சை கொள்வர்,Pichchai kolvar - பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்) திரு நாரணன்,Thiru Naaranan - ஸ்ரீ மந்நாராயணனுடைய தாள்,Thaal - திருவடிகளை காலம்பெற,Kaalampera - விரைவாக சிந்தித்து,Sindhiththu - தியானித்து உய்ம்மின்,Uymmmin - உஜ்ஜூவியுங்கோள். |