| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3008 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மஹாப்ரபுக்களாயிருந்து நெடுங்காலம் தாங்கள் ஆண்ட ராஜ்யங்களை யிழப்பார் என்றது கீழ்ப்பாட்டில்; அரசாளுகிற நாளில் போக்யைகளாகக் கைக்கொண்ட மடவார்களையும் பகைவர்க்குப் பறிகொடுத்துப் பரிதாபப்படுவர்களென்கிறாரிதில்) 2 | உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்; செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2 | திறை கொணர்ந்து,Thirai konarnthu - செலுத்தவேண்டிய கப்பத்தைக் கொண்டுவந்து கட்டி உய்ம்மின் என்று,Uymmin endru - பிழைத்துப்போங்கள் என்று கட்டளையிட்டுக்கொண்டு உலகு,Ulagu - இவ்வுலகத்தை ஆண்டவர் தாம்,Aandavar thaam - அரசுபுரிந்த பிரபுக்கள் தாம் இம்மையே,Immaiye - இப்பிறப்பிலேயே தம்,Tham - தங்களுடைய இன் சுவை மடவாரை,In suvai madavaarai - பரமபோக்யைகளான ஸ்திரீகளை பிறர்கொள்ள,Pirarkolla - அயலார் கவாந்துகொள்ளும்படி விட்டு,Vittu - கையிழந்து வெம் மின் ஒளி வெயில்,Vem min oli veyil - கொடி தாய் மின்னொளி பரக்கின்ற வெயிலையுடைய கானகம் போய்,Kaanagam poyi - காட்டிலே சென்று குமை தின்பர்கள்,Kumai dinbargal - திண்டாடுவர்கள்; (ஆதலால்) செம் மின் முடி,Sem min mudi - செவ்விய காந்திபெற்ற திருமுடியையுடைய திரு மாலை,Thiru maalai - திருமகள் கொழுநனை விரைந்து,Viraindhu - விரைவாக அடி சேர்மின்,Adi saermin - அடி பணியுங்கோள். |