திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3009 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3009திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே வாழ்ந்தவர்கள் அந்தச் செல்வக் கிடப்பை யிழந்து ஒருவரும் மதியாதபடி யாவர்களென்கிறார்.) 3
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக் கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3
பதவுரை Show / Hide
அடிசேர் முடியினர் ஆகி,Adiser mudiyinar aagi - தமது காலிலேபடிந்த கிரிடத்தையுடையவராகி
அரசர்கள் தாம்,Arasargal thaam - மஹாப்ரபுக்கள்
தொழ,Thozha - வணங்கும்படியாகவும்
இடி சேர் முரசங்கள்,Idi ser murasangal - இடியோடு ஒத்த பேரிகைகள்
முற்றத்து,Mutrathu - தம் தம் மாளிகைமுற்றத்திலே
இயம்ப,Iyamba - முழங்கும்படியாகவும்
இருந்தவர்,Irundhavar - வாழ்ந்தவர்கள்
பொடி சேர்துகள் ஆய் போவர்கள்,Podi serthugal aay povargal - பொடியோடு பொடியாய்த் தொலைந்து போவர்கள்;
ஆதலின்,Aadhalin - ஆதலால்
நொக்கென,Nokkena - விரைவாக
கடி சேர் துழாய் முடி,Kadi ser thulasi mudi - நறுமணம்மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடைய
கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய
கழல்கள்,Kazhalgal - திருவடிகளை
நினைமின்,Ninaimin - சிந்தியுங்கள்.