Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3010 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3010திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மதிப்பு கெடுவதுமாத்திரமன்றிக்கே ஆயுளும் நிலைநில்லாதாகையாலே எம்பெருமான் திருவடிகளை வணங்குகளென்கிறார்.) 4
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலின் பலர்
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4
நினைப்பான் புகில்,Ninaippaan pugil - ஆலோசித்துப் பார்க்குமிடத்து
எனைத்தோர் உலகங்களும்,Enaiththoor ulagangalum - அநேகயுகங்கள்
இ உலகு ஆண்டு கழித்தவர்,I ulagu aandu kazhiththavar - இவ்வுலகத்தையாண்டு முடிந்து போனவர்கள்
கடல் எக்கலில் நுண் மணலில் பலர்,Kadal ekkalil nun manalil palar - கடலில் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை காட்டிலும் அதிகமான தொகையுள்ளவர்களாவர்;(எப்படிப்பட்ட பிரபுக்களும்)
மனைப்பால்,Manaippaal - தாங்களிருந்த வீட்டின் இடம்
மருங்கு அற,Marungu ara - சுற்றுப்பக்கங்களோடும்கூடத் தொலையும்படி
மாய்தல் அல்லால்,Maaythal allaal - அழிந்து போவது தவிர
மற்ற கண்டிலம்.,Matra kandilam - வேறொன்றும் பார்த்தோமில்லை; (ஆதலால்)
பனை தாள்,Panai thaal - பனைமரம் போன்ற அடியையுடைய
மத களிறு,Matha kaliru - (குவலயபீடமென்னும்) மதயானையை
அட்டவன்,Attavan - கொன்றொழிந்த கண்ணபிரானுடைய
பாதம்,Paadham - திருவடிகளை
பணிமின்,Panimin - வணங்குங்கள்.