| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3011 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (சிற்றின்பத்தின் நுகர்ச்சியும் அஸ்திரமாதலால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லி வாழுங்களென்கிறார்.) 5 | பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர் மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5 | அம் சீதம் பை பூ பள்ளி,Am seetham pai poo palli - அழகும் குளிர்ச்சியும் விஸ்தாரமுமுள்ள பூம்படுக்கையிலே திரு அருள் பணிமின் என்னும்,Thiru arul panimin ennum - (மாதர்காள்!) கிருபை பண்ணவேணும்’ என்று பிரார்த்திப்பவர்களாய் அணி மென் குழலார் இன்பம் கலவி அமுது உண்டார்,Ani men kuzhalar inbam kalavi amudhu undaar - அழகிய மெல்லிய கூந்தலையுடைய மாதர்களின் சிற்றின் பக்கவலியமுதத்தை அனுபவித்தவர்களானவர்கள் துணி முன்பு நால,Thuni munbu naala - அரைத்துணி (பின் பக்கத்திற்கு எட்டம் போராமல்) முன்புறத்தில்மாத்திரம் தொங்கும்படியான ஏழையையடைந்து பல் ஏழையர் தாம் இழிப்ப,Pal yezhaiyar thaam izhippa - பல மாதர்கள் இழிவாகக் கூறி யேசும்படி செல்வர்,Selvar - (பிச்சையெடுக்கப் போவர்கள்;) (ஆதலால்) மணி மின்னு மேனி,Mani minnu meni - நீலமணிபோல் மின்னுகின்ற திருமேனியையுடைய நம் மாயவன்,Nam maayavan - எம்பெருமானுடைய பேர்,Per - திருநாமங்களை சொல்லி,Solli - ஸங்கீர்த்தனம் பண்ணி வாழ்மின்,Vazhmin - வாழுங்கள். |