| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3012 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இன்றளவும் செல்வம் குன்றுமே ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோமென்கிறார்.) 6 | வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில் ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6 | வாழ்ந்தார்கள் வாழ்ந்தது,Vaazhnthaarkal vaazhndhadhu - நன்றாக வாழ்ந்தவர்களென்று நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பேசப்புகுந்தால், மாமழை மொக்குளின்,Maamalai mokkulilin - பெருமழையில் தோற்றும் நீர்க்குமிழிபோலே மாய்ந்து மாய்ந்து,Maindhu maayndhu - அழிந்தழிந்து ஆழ்ந்தார் என்று அல்லால்,Aazhnthar endru allaal - அதோகதியைபடைந்தனர் என்று சொல்லப்படுவது தவிர அன்று முதல்,Andru mudhal - பரஹ்மஸ்டிருஷ்டி காலம் தொடங்கி இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை,Indru arudhiya vaazhnthaarkal vaazhndhae nirpar enpathu illai - வாழ்ந்தவர்கள் ஒரு தன்மையாக வாழ்ந்தேயிருத்தல் கிடையாது; நிற்குறில்,Nirguril - நிலைநின்ற வாழ்வடைய வேண்டில் ஆழ்ந்து ஆர் கடல் பள்ளி,Aazhndhu aar kadal palli - ஆழமாகி நிறைந்த திருப்பாற்கடலில் துயில்கின்ற அண்ணல்,Annal - ஸ்வாமிக்கு அடியவர் ஆமின்,Adiyavar aamin - அடிமைப்பட்டிருங்கள் |