திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3013 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3013திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (தேஹ போஷணத்திற்கு ஹேதுவான அன்னபானம் முதலிய போகமும் அநித்யமாகையாலே ஸகலகாரணபூதனான ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை அநுஸந்தியுங்கோளென்கிறார்.) 7
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர், ‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின், கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7
பதவுரை Show / Hide
ஆம் இன்சுவை அவை அடிசில் ஆறோடு,Aam inchuvai avai adichil aarodu - பரமயோக்யமாய் ஷட்ரஸோபேதமான அன்னத்தை
உண்டு ஆர்ந்தபின்,Undu aarindhapin - வயிறாரவுண்டு தீர்ந்த பின்பும்
துர் மெல் மொழி மடவார் இரக்க,Thur mel mozhi madavaar irakka - வெகு அழகாகப் பேசவல்ல மாதர்கள் வேண்டிக்கொள்ள
பின்னும்,Pinnum - மேலும் (அந்த வேண்டுகோளை மீறமுடியாமல்)
துற்றுவார்,Thutruvaar - தின்றுகொண்டிருந்தவர்கள்
எமக்கு ஒரு துற்று ஈ மின் என்று,Emmakku oru thutru ee min endru - (அப்படி யிருப்பதற்கான செல்வம் அழந்தவளவிலே) ‘எமக்கு ஒரு கவளம் கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு
இடறுவர்,Idaruvar - தடுமாறிச் செல்வர்கள்;
ஆதலின்,Aadalin - ஆதலால்
துழாய் முடி,Thuzhai mudi - திருத்துழாயையணிந்த திருமுடியையுடைய
ஆதி அம் சோதி,Aathi am sodhi - ஸர்வேச்வரனுடைய
குணங்கள்,Gunangal - திருக்குணங்களையே
கோமின்,Komin - சேர்த்து அனுபவியுங்கள்.