Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3014 (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3014திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார்.) 8
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8
குணம் கொள்,Gunam kol - குணசாலிகளும்
நிறை புகழ்,Nirai pugal - நிறைந்த கீர்த்தியை யுடையருமான
மன்னர்,Mannar - ராஜகுமாரர்களாய்
கொடை கடன் பூண்டு இருந்து,Kodai kadhan poontu irundhu - ஔதார்யத்தைக் கடமையாக ஏறிட்டுக் கொண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,Inanggi ulagu udan aakkilum - உலகங்களை ஸ்வாதீனப்படுத்தி ஆண்டாலும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த ஸர்வேசுரனை ஆச்ரயித்தவில்லாதவர்கள்
மணம் கொண்ட போகத்து,Manam konda bhogathu - மிகநல்ல போகங்களில்
மன்னியும்,Manniyum - பொருந்தியிருந்தாலும்.
மீனவர்கள்,Meenavargal - அதோகதியடைவர்கள்;
பணம் கொள்,Panam kol - படமெடுத்தாடுகின்ற
அரவு,Aravu - ஆதிசேஷனை
அணையான்,Anaiyaan - படுக்கையாகவுடைய ஸர்வேசுரனது
திரு நாமம்,Thiru naamam - திருநாமங்களை
படிமின்,Padimin - படியுங்கள்; (படித்தால்)
மீள்வு இல்லை,Meelvu illai - மீட்சியில்லாத பெருஞ்செல்வம் கிடைக்கும்.
3014திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.) 10
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10
ஒண் தொடியாள்,On thodiyal - அழகிய கைகளையுடையளாகிய
திரு மகளும்,Thiru magalum - பெரிய பிராட்டியாரும்
நீயுமே,Neeyume - அவளுடைய நாயகனான நீயுமே
நிலா நிற்ப கண்ட சதிர்,Nila nirpa kanda sadhir - களித்து வாழ்கிற அழகிய இருப்பை
கண்டு,Kandu - இப்போது காணப்பெற்று
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்,Kandu kettu urru mondu undu uzhalum aingaruvi kanda inbam - காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும்
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்,Therivu ariya alavu illa siru inbam - கைவல்ய ஸூகத்தையும்
ஒழிந்தேன்,Ozhindhen - தவிர்க்கப் பெற்றேன்;
உன் திரு அடியே அடைந்தேன்,Un thiru ade adaindhen - உனது திருவடிகளை அடையவும் பெற்றேன்.