திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3015 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார்.) 9 | படிமன்னு பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடிமன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9 | பதவுரை Show / Hideபடி மன்னு,Padi mannu - பரம்பரையாய் வருகின்ற பல் கலன்,Pal kalan - பலபல ஆபரணங்களையும் பற்றோடு அறுத்து,Patroodu aruthu - ஸவாஸநமாகவிட்டவர்களாய் ஐம்புலன்,Aimbulan - பஞ்சேந்திரியங்களையும் வென்று,Vendru - வசப்படுத்தினவர்களாய் செடி மன்னு,Sedi mannu - தூறுமண்டிக்கிடக்கும்படியாக காயம்,Kayam - சரீரத்தை செற்றார்களும்,Settraarkalum - தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும் ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில் அவனை இல்லார்,Avani illaar - அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள் குடி மன்னும்,Kudi mannum - வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான இன் சுவர்க்கம்,In suvargkam - இனிமையான சுவர்க்கத்தை எய்தியும் மீன்வர்கள்,Eydhiyum meenvargal - அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்) கொடிமன்னு புள் உடை,Kodimannu pul udai - கருடத்வஜனான அண்ணல்,Annal - ஸ்வாமியினுடைய கழல்கள்,Kazhalkal - திருவடிகளை குறுகுமின்,Kurugumin - கிட்டுங்கள்; (அப்படியாயின்) மீள்வு இல்லை,Meelvu illai - என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும். |